சுசித்ரா டுவிட்டரில் வெளியான ஆபாச படங்களுக்கு திரிஷா பதில்







சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு வாரமாக நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை அந்தரங்க வீடியோக்களும் அடுக்கடுக்காக குவிந்து திரையுலகை பரபரப்பாக்கியது. நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்டிரியா, ஹன்சிகா ஆகியோர் பெயர்களில் படங்கள் வெளியிடப்பட்டது.

அனுயா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரின் ஆபாச படங்கள் வெளிவந்தன. டைரக்டர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் அவரும் ஆண்ட்ரியாவும் பேசிக்கொள்வது போன்ற ஆடியோ உரையாடலும் வெளியானது.

நடிகை அமலாபால், பார்வதி நாயர் உள்ளிட்ட மேலும் பலரது படங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் நடிகர் நடிகைகள் அதிர்ச்சியானார்கள். தொடர்ச்சியாக மது விருந்து நிகழ்ச்சியில் தனுஷ், தமன்னா, பூனம்பாஜ்வா ஆகியோர் ஆடுவது போன்ற வீடியோவும் வெளியானது. நடிகர்-நடிகைகள் மது அருந்தும் காட்சிகள் அதில் இடம்பெற்று இருந்தன.

இதனால் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் குவியத்தொடங்கினார்கள். அதில் வெளியாகும் படங்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பினார்கள்.

சுசித்ரா, நடிகர்- நடிகைகள் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சியொன்றில் தாக்கப்பட்டதாகவும் அதற்கு பழிவாங்குவதற்காகவே இந்த ஆபாச படங்களை அவர் வெளியிட்டு வருவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா மறுத்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ‘ஹேக்’ செய்து ஊடுருவி இந்த படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள் என்றும் நடிகர்-நடிகைகள் மீதான வன்மத்தை காட்ட எனது டுவிட்டரை அவர்கள் மேடையாக பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினார். பின்னர் திடீரென்று டுவிட்டர் கணக்கை மூடிவிட்டு வெளியேறி விட்டார்.

ஆனாலும் புதிதாக சுசித்ரா பெயரில் பல டுவிட்டர் பக்கங்கள் முளைத்துள்ளன. அவற்றில் தொடர்ந்து ஆபாச படங்கள் வெளியாகி வருகிறது. நடிகர்-நடிகைகளின் அந்தரங்க படங்கள் மர்ம நபர்களுக்கு எப்படி கிடைத்தன என்பது மர்மமாக உள்ளது. திரையுலகில் இருப்பவர்களே இந்த படங்களை வெளியிட்டு வருகிறார்களா? அல்லது மர்ம நபர்கள் ஹேக் செய்து திருடி வெளியிடுகிறார்களா? என்று தெரியவில்லை.

இந்த நிலையில் சுசித்ரா டுவிட்டரில் வெளியான தனது படம் குறித்து நடிகை திரிஷா கருத்து வெளியிட்டு உள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“பழிவாங்க வேண்டிய தேவை இல்லை. அமைதியாக உட்கார்ந்து காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்வார். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு அளிப்பார்.”

இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url