இனி ஃபேஸ்புக் கமென்ட்டிலும் காதலிக்கலாம்!
ஃபேஸ்புக்கில் நம் பதிவுக்குக் கீழே கமென்ட் செய்வோருக்கு, இனி ரியாக்ஷன் மூலம் பதிலளிக்கலாம். நேற்று முதல் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது, ஃபேஸ்புக் நிறுவனம்.
ஃபேஸ்புக் பதிவுகளுக்கு, லைக் பட்டன் மட்டும்தான் இருந்தது. இதனால், பிடிக்காத பதிவுகளுக்கு ரியாக்ட் பண்ண முடியாது. எனவே, கடந்த ஆண்டு, பதிவுகள் தொடர்பான நம் உணர்வை வெளிபடுத்த கோபம், காதல், நகைச்சுவை உள்ளிட்ட ஆறு குறியீட்டு 'லைக்'குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, கமென்ட்டுகளுக்கும் இந்த ஆறு உணர்வுகளின் குறியீட்டு 'லைக்'குகள் வந்துவிட்டன. பதிவுகளின் கீழ் போடப்படும் கமென்ட்டுகள்குறித்து, நம் உணர்வுகளை வெளிபடுத்த முடியும்.