அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அடுத்தடுத்து டிரம்ப் வாய்ப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் எரிசக்திதுறை ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் சட்டர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் எரிசக்தி துறை ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு மின்கட்டணத்தை நிர்ணயித்தல் மற்றும் பல லட்சம் டாலர் மதிப்புள்ள மின்திட்டங்களை தீர்மானிக்கும் பொறுப்பு இந்த அமைப்புக்கு உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் சட்டர்ஜியை எரிசக்தி ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினராக நியமனம் செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இவரது பதவிக்காலம் 2021ம் ஆண்டு ஜூன் 30 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல் சட்டர்ஜி வாஷிங்டன் டிசியில் தனது அரசு பதவியை தொடங்கி பல்வேறு பதவிகள் வகித்துள்ளளார்.முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் நிறுத்தி வைக்கப்பட்ட திட்டமான, கனடா முதல் அமெரிக்காவின் டெக்சாஸ் வரையில் பைப் மூலம் கேஸ் கொண்டு செல்லும் திட்டத்தை இவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.