மீண்டும் இந்தியா வருகிறார் மரடோனா
கொல்கத்தா: அர்ஜென்டினா கால்பந்து அணி முன்னாள் நட்சத்திரம் டீகோ மரடோனா, வரும் செப்டம்பரில் மீண்டும் இந்தியா வருகிறார். செப். 18, 19 தேதிகளில் கொல்கத்தாவில் தங்கியிருக்கும் மரடோனா, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான கால்பந்து அணியுடன் காட்சிப் போட்டியிலும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு கொல்கத்தா வந்த மரடோனாவுக்கு பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது. காட்சிப் போட்டிக்குப் பின்னர் நடைபெறும் பிரமாண்ட விழாவில், அவருக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.