சிக்கன் சாப்பிடாதது ஏன்? ஸ்ருதி விளக்கம்
ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஜெனிபர் லோபஸ் உள்ளிட்ட பலர் அசைவ உணவை கைவிட்டு சைவ உணவுக்கு மாறியிருக்கின்றனர். அதே பாணியில் ஸ்ருதி ஹாசனும் சைவ உணவுக்கு மாறி உள்ளார். இதுபற்றி ஸ்ருதி கூறும்போது,’சைவ உணவு உண்பதையே தொடர்கிறேன். பன்றி, மாட்டிறைச்சியை நான் பல ஆண்டுகளாக உண்பதில்லை.
சுற்றுசூழல் மற்றும் நடைமுறை காரணங்களுக்காக அந்த இறைச்சியை நான் உண்ணக்கூடாது என்று முடிவு செய்தேன். கோழி கறி சாப்பிடுவதும் எனக்கு உகந்ததாக இல்லை. கோழி பண்ணைகளின் பராமரிப்புகள் சரியில்லாமலிருப்பது இதற்கு காரணம். மேலும் இது உடல் நலம் சார்ந்த முடிவும் ஆகும்.
மேலும் தற்போது வழங்கப்படும் பாலில் என்னவெல்லாம் கலந்திருக்கிறது என்பது கடவுளுக்கு தெரியும். எனவே பால் குடிப்பதையும் நான் தவிர்த்துவிட்டேன். இப்போதுள்ள காய்கறிகளிலும் என்ன சத்து இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.