அனுஷ்கா ஷர்மாவுக்கு விராத் கொடுத்த உதை...உண்மை என்ன?
பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராத் கோலி,இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். சதமடித்த விராத், அனுஷ்கா ஷர்மாவுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தது, உலக கோப்பை கிரிக்கெட்டின் போது விராத் கோலி சரியாக விளையாடாமல் போனதற்குக் காரணமே அனுஷ்கா ஷர்மாதான் என ரசிகர்கள் திட்டித் தீர்த்தது, எங்கள் பிரவைஸியில் யாரும் தலையிட வேண்டாம் என விராத் வெளிப்படையாகப் பேட்டியளித்தது இப்படி இவர்கள் செய்தியில் தினம் தினம் அடிப்பட்டதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
இப்போது நிலை அப்படியே தலைகீழ் காதலர் தினம் நெருங்கும் இந்த சமயத்தில், இவர்களது காதல் அண்மையில் முடிவிற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இருவரும் அதிகாரப் பூர்வமாக சொல்லவில்லை என்றாலும் கோலி தனது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் இருந்து அனுஷ்கா ஷர்மாவின் தொடர்பை துண்டித்துள்ளார். அதிகமான பின் தொடர்பாளர்கள் இருப்பதால் தானாகவே பழைய தொடர்பாளர்களின் கணக்குகள் துண்டிக்கப்பட்டதாகக் காரணங்கள் தெரிவித்தாலும் மீண்டும் இணைக்கும் முயற்சி விராத் , அனுஷ்கா ஷர்மா இருவர் தரப்பிலும் நிகழவில்லை.
இதற்கிடையில் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை விராத் வெளியிட்டு ”உலகிலேயே மிக அழகான பெண்ணுடன் எனது இனிமையான நாள்..என் வலிமை, என் மகிழ்ச்சி, என் எல்லாமே என் அம்மா தான்” என பதிவிட்டுள்ளார். அவ்வளவுதான் விடுவார்களா வலை வாசிகள் இவர்கள் பிரிவினை சித்தரிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட வைரலோ வைரலாகியுள்ளது.
அனுஷ்கா 2014ல் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்த புகைப்பட போஸையும், விராத் கோலியின் வேறு ஒரு விளம்பரப் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து அந்த புகைப்படம் உருவாக்கபட்டிருகிறது. விராத் கோலி, அனுஷ்காவை தனது கால்களால் உதைத்துத் தள்ளுவது போன்று உருவாக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படம் தான் இப்போது பாலிவுட், மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஹாட் ஹிட்!