தெரியுமா? ஹெராயின்!
ஹெராயின் (diacetylmorphine) மார்பினிலிருந்து பெறப்படும் போதை வஸ்து. ஹெராயினின் மூலம் ஜெர்மனி வார்த்தை heroisch. 1898 ஆம் ஆண்டு ஜெர்மனியின் பேயர் பார்மசூட்டிகல் நிறுவனத்தின் மூலம் காசநோய் மருந்தாக சந்தைக்கு வந்தது. அமெரிக்காவில் ஹெராயினின் பயன்பாடு 80%.
* வெள்ளை மற்றும் பழுப்பு, கருப்பு நிறத்தில் பவுடராக கிடைக்கும் ஹெராயினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 9.2 மில்லியன். ஓபியம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 13.5 மில்லியன். 1874 ஆம் ஆண்டு சி.ஆல்டர் ரைட் என்ற ஆராய்ச்சியாளர்
மார்பினிலிருந்து ஹெராயினை பிரித்தெடுத்தார்.
* ஒருநாளுக்கு 3 டோஸ் அடிப்படையில் 150-250 மி.கி ஹெராயின் பயன்படுத்தப்படுகிறது. நரம்பில் ஊசி மூலம் செலுத்திய ஹெராயின் 8 நொடிகளில் மகிழ்ச்சி மனநிலையை உருவாக்குகிறது.
* தினசரி ஹெராயினுக்கான செலவு 200 டாலர்கள். தென்அமெரிக்காவின் ஹெராயின்தான் உலகம் முழுவதும் ஃபேமஸ். ஹெராயின் பயன்பாட்டால் கல்லீரல் செயலிழப்பு, இதயநோய்கள் ஏற்படுகின்றன.
* டோப், ஹார்ஸ், ஜங்க், ஸ்மாக், டார், ஹெச், பாய் ஆகியவை ஹெராயினின் மற்ற பெயர்கள்.