பஞ்சாப் பெண் ஆசிரியர்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடு!

பஞ்சாப் பொது பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம், பெண் ஆசிரியர்களுக்காக புதிய ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை வெளியிட்டுள்ளது.



பஞ்சாப் மேல்நிலைக் கல்வியின் உதவி இயக்குநர் அமர்பீர் சிங், பஞ்சாப்பில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.  அதில், 'அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்கள், பணிக்கு வரும்போது ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற அநாகரீகமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது. பஞ்சாப்பின் கலாச்சார ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஆசிரியர்கள் தான் மாணவர்களின் முன்னோடி. எனவே, பெண் ஆசிரியர்கள் முழுமையாக உடலை மறைக்குபடி ஆடை அணிந்து வர வேண்டும்', என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், ஆண்களின் ஆடைகளைக் குறித்து எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url