நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபர் கைது
கவுதம் கார்த்திக் நடிக்கும் இந்திரஜித் படத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர்
சோனரிகா படோரியா. இவர் மும்பையில் தங்கியுள்ளார். அங்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி டார்ச்சர் கொடுத்து வந்தார். முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த சோனாரிகா, தொடர்ந்து அந்த நபர் கொடுத்த தொல்லையால் நம்பரை பிளாக் செய்தார். ஆனாலும் வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச மெசேஜ், ஆபாச புகைப்படங்கள் வந்தன. இது குறித்து சோனரிகா போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த மர்ம நபர், கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் சுவப்னில் சஹாரே என்பது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்தனர். போலீஸ் உதவி கமிஷனர் சூரியகாந்த் கரத் கூறும்போது, ‘செல்போன் டவரை வைத்து அந்த நபரை கண்டுபிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது, சோனரிகாவை காதலிப்பதாகவும் அவரை மணக்க விரும்புவதாகவும் கூறினார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றார்.