ஆன்லைனில் பொருள் வாங்கும் முன் இங்க கொஞ்சம் பாருங்க..!



ஆன்லைன் வாங்கும்

1. முழுமையாக ஆய்வுசெய், 2. விலைகளை ஒப்பிட்டுப் பார் 3. யோசித்து வாங்கு... இவைதான் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது நாம் கவனிக்கவேண்டிய மூன்று விதிகள்.  ஆயிரக்கணக்கான ஷாப்பிங் தளங்கள் இருக்கும் இணையத்தில், ஒவ்வொரு ஷாப்பிங் தளமாகப் போய் விலைகளை ஒப்பிட்டு வாங்குவது என்பது கடினமான வேலைதான். அதை எளிமையாக்குகின்றன இந்த இணையதளங்கள். இணையத்தில் அடி உதை தவிர, வேறு எதை வாங்குவதாக இருந்தாலும் இங்கே ஒரு எட்டு பார்த்துவிட்டு வாங்கலாம்.

ப்ரைஸ் ட்ரீ

விலை வேறுபாட்டு விவரங்கள் தெரிந்துகொள்ள சிறந்த தளம் இது. இதில் உங்கள் இமெயிலைப் பதிவுசெய்வதன் மூலமாக, ஒரு பொருளின் விலை ஏறி-இறங்குவதைக்கூட எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். பொருளை க்ளிக் செய்யும்போதே அதற்கான அன்றைய தேதியின் பெஸ்ட் விலை என்ன என்பதைக் காட்டக்கூடியது இந்த ப்ரைஸ் ட்ரீ வெப்சைட்.

www.pricetree.com


அமேஸானின் இணையதளம் ஜங்ளீ. இது ஒரு வெர்ச்சுவல் டேட்டாபேஸாக இணையத்தின் வெவ்வேறு தளங்களில் இருந்து விற்பனைப் பொருட்களின் விவரங்களைச் சேகரித்துத் தரும் ஓர் இடமாகவே இருந்தது. அதற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கு கிடைக்கும், அதன் வெவ்வேறு இணையதள விலை விவரங்கள் முதலான தகவல்களையும் தர ஆரம்பித்தது. விலை விவரத் தேடலிலும் ஒப்பீடு செய்வதிலும் முன்னணியில் இருக்கும் தளம் இது.

www.junglee.com/

2012-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற தளம். என்னென்ன இணையதளத்தில் என்ன விலை என்பதை எந்தவித சார்பும் இல்லாமல் புட்டுப் புட்டு வைக்கக்கூடிய இடம் இது. வெறும் விலை வேறுபாடுகளை மட்டும் சொல்லாமல், ஆஃபர்கள், கிஃப்ட் கூப்பன்கள் என, சிறப்புச் சலுகைகள் எங்கெங்கு கிடைக்கின்றன என்பதையும் சொல்லக்கூடிய இணையதளம் இது. கம்பேர் ராஜாவை, வெப்சைட் வழியாக மட்டும் அல்லாது செல்போன்களில் ஆண்ட்ராய்டு மற்றும் IOS ­செயலிகள் வழியாகவும் உபயோகிக்க முடியும்.

www.compareraja.in/

ஆன்லைன் ஷாப்பிங்

இந்தத் தளத்தில், ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான பொருட்களின் விலை வேறுபாடுகள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. நூற்றுக்கணக்கான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது இந்தத் தளம். சிறந்த இணையதள விருதுகளை எல்லாம் வென்ற இணையதளம். செல்போன், டி.வி தொடங்கி ஆட்டோமொபைல்ஸ் வரையில் இந்த ஆன்லைன் வெப்சைட்டில் வாங்க முடியும். ஹெல்மெட், பைக் அக்சசரீஸ், கார் அக்சசரீஸ் ஆகிய ஆட்டோமொபைல் சங்கதிகளையும் இங்கு எளிதாக விலை விவரம் அறியலாம். இணையத்தில் மட்டும் அல்லாது ஆண்ட்ராய்டு செயலியாகவும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

www.pricedekho.com/

மை ஸ்மார்ட் ப்ரைஸ்

எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்தான் இந்தத் தளத்தில் ஸ்பெஷல். மொபைல்போன் தொடங்கி லேப்டாப், ஹோம் அப்ளையன்சஸ், ஸ்மார்ட் வாட்ச் வரைக்கும் எந்தத் தளத்தில் விலை மலிவாகவும் தரமாகவும் கிடைக்கிறது என்பதை அறிந்துகொள்ள இந்தத் தளம் உதவுகிறது. இதை கூகுள் க்ரோமில் எக்ஸ்டென்ஷனாகவும் பயன்படுத்தலாம். கேட்ஜெட் வாங்கும்போது இங்கே ஒரு பார்வை பார்த்துவிட்டு வாங்குவது நல்லது.

www.mysmartprice.com/

 91 மொபைல்ஸ்

மொபைல்போன்களுக்கான விலைகளைத் தெரிந்துகொள்வதற்காக இருக்கும் பிரத்யேகத் தளம் இது. மொபைல்போன்கள் மட்டும் அல்லாது பவர்பேங்க், புளூடூத் ஹெட்செட் தொடங்கி சகல மொபைல்போன் உபரிகளின் விலை விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும். கூடவே மற்ற விலை வேறுபாட்டு விவரம் தரும் இணையதளங்களில் இல்லாத வகையில் இதில் ஒவ்வொரு மொபைலுக்கும் பயனாளர்களின் பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url