இதயநோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை
ஆண், பெண் பேதமின்றி இதய நோய் தாக்குகிறது. இதய நோய் இப்போது இளைஞர்களையும் தாக்குகிறது. இதய நோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை!
இதயநோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை
இதய நோய் அதிகரித்து வருகிறது. ஆண், பெண் பேதமின்றி தாக்குகிறது. முன்பெல்லாம் நடுத்தர வயதைக் கடந்தவர்களை தாக்கிய இதய நோய் இப்போது இளைஞர்களையும் தாக்குகிறது. இதய நோயின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை!
* உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அதில் சீரற்ற நிலை ஏற்படும்போது உயர் ரத்த அழுத்தம் உருவாகும். அது இதய நோயின் தொடக்கமாக அமைந்து விடும். ஆகையால் ரத்த அழுத்த அளவு சீராக இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்து வர வேண்டும்.
* பொதுவாக ரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவுதான் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 130/85 என்ற அளவில் இருக்கலாம். இந்த அளவில் மாற்றங்கள் அதிகரிக்க தொடங்கினால் உடனடியாக உணவு, வாழ்க்கை முறைகளில் மாற்றம் செய்து கொள்வது நல்லது.
* புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பழக்கம் இதயநோய் பாதிப்புக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. சுவாசத்திற்கும், இதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிகரெட்டில் இருந்து வெளிப்படும் புகையில் சுவாசிக்கும் பிராணவாயுவான ஆக்சிஜனும் அதிக அளவு வெளிப்படும். அப்பொழுது ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவு குறைபடும். அதனை ஈடுகட்ட இதயம் வேகமாக துடிக்கும். இதயத்தின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது அவசியம்.
* கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கும் இதய நோய் பாதிப்பு அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
* இதயம் ஆரோக்கியமாக இயங்க உணவு விஷயத்தில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். அதிலும் இதய நோய்க்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரியவந்தால் உஷாராக இருக்க வேண்டும். மாமிச உணவுகள், தேங்காய் பதார்த்தங்கள், அதிக அளவு சோடியம், இனிப்பு கலந்த உணவு பொருட்கள், துரித உணவுகள், வறுத்த உணவு பதார்த்தங்கள், எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட நொறுக்கு தீனிகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதார்த்தங்கள் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது.
* கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலில் கொழுப்பு அளவு அதிகரிப்பது மாரடைப்புக்கு வழிவகுத்துவிடும். சத்தான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். தக்காளி, எண்ணெய்யில் வறுக்கப்படாத உருளைக்கிழங்கு, சிட்ரஸ் பழங்கள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
* உடல் எடை விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதிக உடல் எடை கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். உடல் எடையை சீராக பராமரித்து வருவது ரத்த அழுத்தத்தை சீர் செய்யும்.
* உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்காக தினமும் 30 நிமிடமாவது ஒதுக்க வேண்டும்.