இரவில் ரகசிய விசிட் அடிக்கும் வாரிசு நடிகர் பற்றி கேட்டதும் கோபத்தில் கொந்தளித்த நடிகை
மும்பை: நடிகர் அர்ஜுன் கபூருடனான தொடர்பு குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர் மீது நடிகை மலாய்க்கா அரோரா கோபப்பட்டார்.
நடிகை மலாய்க்கா அரோரா தனது கணவரான நடிகர் அர்பாஸ் கானை பிரிந்து தனியாக வாழ்கிறார். அர்பாஸ் தனது அண்ணன் சல்மான் கானின் நிழலில் வாழ்வது பிடிக்காமல் மலாய்க்கா அவரை பிரிந்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே மலாய்க்காவுக்கும், நடிகர் அர்ஜுன் கபூருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பும் பிரிவுக்கு காரணம் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
இரவு விசிட்
கணவரை பிரிந்து வாழும் மலாய்க்காவின் வீட்டிற்கு அர்ஜுன் கபூர் இரவு நேரங்களில் சென்று வருகிறாராம். இது அர்ஜுனின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
மலாய்க்கா நடிகை பிபாஷா பாசு மற்றும் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசனுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மூவரும் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மலாய்க்கா, பிபாஷா மற்றும் சூசன் ஆகியோர் பதில் அளித்தனர். அப்பொழுது ஒரு பத்திரிகையாளர் மலாய்க்காவிடம் அர்ஜுன் கபூர் பற்றி கேட்டார். உடனே மலாய்க்காவுக்கு கோபம் வந்துவிட்டது.
நாங்கள் மூன்று பேரும் அருமையான பெண்கள். எங்களை பற்றி பேசுங்கள், கேள்வி கேளுங்கள். நாங்கள் சந்தித்தால் என்ன பேசுவோம், என்ன நடக்கும் என்று ஏன் பேசக் கூடாது என்று மலாய்க்கா பத்திரிகையாளரை பார்த்து கேட்டார்.