முத்தக்காட்சியில் நடிக்க மறுத்து கதறியழுத ஹீரோயின்
மோகனா என்ற நாடக நடிகையை, சக நடிகர் டாக்டர் சீனிவாசனும், ஊர் பண்ணையார் நான் கடவுள் ராஜேந்திரனும் காதலிக்கின்றனர். இருவரிடமும் சிக்கித் தவிக்கும் மோகனாவின் கதி என்ன என்பதை சொல்லும் படமாக மோகனா உருவாகியுள்ளது. ஒளிப்பதிவு செய்து ஆர்.ஏ.ஆனந்த் இயக்கியுள்ளார். இவர், செவிலி பட இயக்குனர். மோகனாவாக கல்யாணி நாயர் மற்றும் உமா, ஹரீஷ், மோரா, மும்பை சீனுஜி நடித்துள்ளனர். ஆர்.ஏ.ஆனந்த் கூறுகையில், ‘ராஜேந்திரனின் கனவில் வந்து ஹீரோயின் முத்தம் கொடுக்கும் காட்சியைப் படமாக்க திட்டமிட்டேன். ஆனால், தனக்கு அந்த முத்தக் காட்சி வேண்டும் என்று சீனிவாசன் கேட்டிருந்தார்.
ஆனால், இந்தக் காட்சியில் நடிக்க ஹீரோயின் மறுத்து விட்டார். இதையடுத்து, திடீரென்று அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் கஷ்டப்பட்டு அவரைத் தேடிக் கண்டுபிடித்தனர். அங்கிருந்த ஒரு ரூமில், கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார் ஹீரோயின். இதையறிந்த நான், முத்தக்காட்சியை படமாக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த பிறகே நடிக்க வந்தார்’ என்றார்.