பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடையை களையசெய்து போலீஸ் விசாரணை செய்த கொடூரம்
பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை ஆடையை களையசெய்து ஆண் போலீசார் விசாரணை நடத்திய கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகார்,
அரியானா மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட 14-வயது சிறுமியிடம் விசாரித்த கைதால் ஆண் போலீஸ் அதிகாரி, சிறுமியை வலுக்கட்டாயமாக ஆடையை களைய செய்து உள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர்நீதிமன்றம் அரியானா டிஜிபிக்கு நோட்டீஸ் விடுக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க அரியானா மாநில அரசும் உத்தரவிட்டு உள்ளது.
அரியானா மாநில உள்துறை கூடுதல் செயலாளர் ராம் நிவாஸ் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்து உள்ள பேட்டியில், “இவ்விவகாரம் மிகவும் முக்கியமானது... சிறுமியின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் யார் தவறு செய்து இருந்தாலும் தப்ப முடியாது... குற்றவாளிகள் தப்ப முடியாது,” என கூறிஉள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய தந்தையின் வழியாக கொடுத்து உள்ள மனுவில், “பாலியல் பலாத்காரத்தை அடுத்து விசாரணை நடந்த போது போலீஸ் என்னை ஆடையின்றி நிற்க செய்தது, பாலியல் பலாத்காரத்தை சோதிப்பதாக கூறி என்னை தொட்டனர். இந்த பாலியல் தொல்லை தொடர்பாக நாங்கள் மாநில டிஜிபியிடம் புகார் கொடுத்தோம் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி பாலியல் பலாத்காரம் தொடர்பாக புகார் கொடுத்தோம்.
நவம்பர் 23-ம் தேதி சிறுமியை விசாரணைக்கு கைதால் அழைத்து சென்ற போலீஸ் பாலியல் தொல்லை கொடுத்தது எனவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.