பூமியை போன்ற 7 கோள்கள் கண்டுபிடிப்பு - நாசாஅறிவிப்பு
நியூயார்க்: ஸ்பிட்செர் மூலம் பூமியை போன்ற புதிய 7 கோள்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்களில் 3 கோள்கள் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் 3 கோள்களில் நீர் ஆதாரம் இருப்பதையும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை போலவே உயிர்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் பல நாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. வேற்றுகிரகத்தில் மனிதர்கள் வசிக்கிறார்களா என்பதை அறியும் ஆராய்ச்சியும் நடக்கிறது. இந்நிலையில், பூமியில் இருந்து 39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் 7 கோள்கள் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. ஸ்பிட்செர் மூலம் புதிய கோள்களை நாசா கண்டுபிடித்தது.
அங்கு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான காற்று, நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், பூமியை போன்றே மேற்பரப்பும் அடர்த்தியும் காணப்படுகிறது. மிகுந்த வெளிச்சத்துடன் உள்ள இந்த கிரகங்களை இரவில் வெறும் கண்களாலேயே காண முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.