'விஐபி-2' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ், கஜோல் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.




தனுஷ், அமலா பால், சரண்யா நடிப்பில், கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தனுஷ் திரைப் பயணத்தில், இது முக்கியப் படமாகக் கருதப்பட்டது.  இதையடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இன்று விஐபி இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதையடுத்து, ஜூலை 28-ம் தேதி 'விஐபி 2' வெளிவர உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். கதை, வசனத்தை தனுஷ் எழுதியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்தில், கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து, #Raghuvaranisback என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url