ஐ.பி.எல் டி20 : பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்
மொகாலி: ஐ.பி.எல் டி20 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத் லயன்ஸ். முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அம்லா 104, ஷான் மார்ஷ் 52 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. அபாரமாக விளையாடிய குஜராத் லயன்ஸ் அணி 19.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. குஜராத் அணியின் ஸ்மித் 39 பந்துகளில் 74 ரன்களை குவித்தார். ரெய்னா 39 ரன்களும், தினேஷ் கார்த்திக் 35 ரன்களும் எடுத்தனா்.