ஐ.பி.எல் டி20 : கொல்கத்தாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட்
கொல்கத்தா: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட் அணி களமிறங்கியது. பின்னா்19.2 ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்து கொல்கத்தாவை, ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.