இன்னும் ஒரு சில நாட்களில் அடுத்த ரூ.1000 கோடி இலக்கை எட்டவிருக்கும் `பாகுபலி-2′




எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் படம் `பாகுபலி-2′. `பாகுபலி’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரிலீசானது.

`பாகுபலி’ படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 650 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள `பாகுபலி-2′ ரிலீசாகிய 9 நாட்களிலேயே ரூ.1065 கோடியை வசூல் செய்து இந்திய சினிமாவையே ஆட்டம் காண வைத்துள்ளது.



இந்நிலையில், படத்தின் வசூல் வேட்டை மேலும் உயர்ந்து அடுத்த ரூ.1000 கோடி என்ற இலக்கை எட்டவிருக்கிறது. அது எப்படி என்றால், இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2′ ரூ.850 கோடி வசூல் செய்துள்ளது. எனவே இன்னும் சில நாட்களில் இந்திய வசூலில் இப்படம் ரூ.1000 கோடியை எட்டி இந்திய சினாமாவில் வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் மட்டும் `பாகுபலி-2′ ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தில் பாக்ஸ் ஆபிஸில் முதல் 10 இடங்களுக்குள் `பாகுபலி-2′ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad