திரைப்பட நடிகர் வினுச்சக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார்
திரைப்பட நடிகர் வினுச்சக்கரவர்த்தி சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.
சென்னை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 1945–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15–ந் தேதி வினு சக்ரவர்த்தி பிறந்தார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்குமொழி படங்களில் 1000–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வில்லன், நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். கோபுரங்கள் சாய்வதில்லை, ராஜாத்தி ராஜா, குரு சிஷ்யன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். வண்டி சக்கரம் படத்தில் நடிகை சில்க்சுமிதாவை அறிமுகப்படுத்தியவர். இறுதியாக 2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தில் நடித்து இருந்தார். பள்ளி, கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி, இயக்கி நடித்துள்ளார். பின்னர் ரெயில்வேயில் துணை ஆய்வாளராக 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
இவர் கன்னட இயக்குனர் புட்டண்ணாகனகலிடம் கதையாசிரியராக சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இவர் கதை எழுதிய பரசக்கே கண்டதின்மா என்ற படம் ரோசாப்பு ரவிக்கைகாரி என்று தமிழில் எடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் வினுசக்ரவர்த்தி நேற்று மரணம் அடைந்தார்.
அவருடைய மனைவி பெயர் கர்ணபூ. இவருடைய மகள் சண்முகபிரியா, அமெரிக்காவில் பேராசிரியையாக உள்ளார். மகன் சரவணபிரியன், லண்டனில் டாக்டராக உள்ளார்.
உடல் நலக்குறைவால் காலமான அவருடைய உடல் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.