‘டிஜிட்டல்’ வடிவத்தில் ‘வெற்றி விழா’
கமல்ஹாசன்–பிரபு இணைந்து நடித்து, பிரதாப் போத்தன் டைரக்ஷனில், 28 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘வெற்றி விழா.’
கமல்ஹாசன்–பிரபு இணைந்து நடித்து, பிரதாப் போத்தன் டைரக்ஷனில், 28 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘வெற்றி விழா.’ அமலா, குஷ்பு, சசிகலா, சலீம் கோஷ் ஆகியோரும் நடித்து இருந்தார்கள். இளையராஜா இசையமைத்து இருந்தார்.
வித்தியாசமான கதை அமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, அட்டகாசமான பாடல்களை கொண்ட படம், அது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரித்து இருந்தது. 28 வருடங்களுக்குப்பின் இந்த படம், ‘டிஜிட்டல்’ வடிவத்துக்கு மாற்றப்படுகிறது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான டார்வின் பிக்சர்ஸ் தேவாவின் முயற்சியால் நவீன ஒளி–ஒலி வடிவமைப்பில் புதுப்பிக்கப்பட்டு, திரைக்கு வர இருக்கிறது.