தினம் ஒரு முட்டை
வளர் இளம்பருவத்தில் தினமும் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவது நல்லது. முட்டையில் இருக்கும் முக்கியமான புரதசத்து உடலுக்கு தேவை. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில், ஒரு நாளுக்கு தேவையான அளவு, கொழுப்பு சத்து இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட வேண்டாம். இளைஞர்கள் இரவு நேரத்தில் ஆப்பாயில், ஆம்லேட் என முட்டை சாப்பிடுகின்றனர். இது, தவறு. முட்டை செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். எனவே, வேக வைத்த முட்டைகளை, காலை அல்லது மதிய வேளைகளில் சாப்பிடுவது சிறந்தது.