விமான ஊழியர்கள் தொல்லை : பாகுபலி டீம் புகார்
விமான நிலையத்தில் ஊழியர்கள் சிலர் தொல்லை தந்ததாக பாகுபலி படக்குழு புகார் கூறியுள்ளது. பாகுபலி 2 நாளை திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக டைரக்டர் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தயாரிப்பாளர் ஷோபு உள்ளிட்டோர் துபாய் சென்றனர். அங்கு பட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஐதராபாத்துக்கு திரும்புவதற்காக ஏர்போர்ட்டுக்கு வந்தனர். அப்போது படக்குழுவுக்கு தொல்லை தரப்பட்டதாக ஷோபு புகார் கூறினார்.
அவர் கூறும்போது, ‘நாங்கள் பயணிக்க இருந்த விமானத்தின் ஊழியர்கள் திடீரென எங்களை நிறுத்தினர். தேவையில்லாத கேள்விகளை கேட்டு தொல்லை தந்தனர். அதில் ஒருவர் இனவெறியுடன் நடந்து கொண்டார். இது எனக்கும் பிரபாஸ், ராஜமவுலி, அனுஷ்கா உள்பட படக்குழுவுக்கும் அதிர்ச்சியை தந்தது’ என்றார். இது தொடர்பாக புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.