பாலிவுட் நடிகையுடன் ஜாகீர்கான் திருமணம் தவறுதலாக வேறு பெண்ணுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
பாலிவுட் நடிகையுடன் ஜாகீர்கான் திருமணம் தவறுதலாக திருமணமான வேறு பெண்ணுக்கு வாழ்த்து சொன்ன கும்ப்ளே மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாகிர்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைவராக விளையாடி வருகிறார்.
இவர் பிரபல திரைப்பட நடிகையான சகரிகா கேட்டேஜ் என்பவரை காதலித்து வந்தார்.
இதைத் தொடர்ந்து சகரிகா கேட்டேஜ் மற்றும் ஜாகீர் திருமணம் நேற்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதை ஜாகீர்கான் அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
Never laugh at your wife's choices. You are one of them !!! Partners for life. #engaged@sagarikavghatgepic.twitter.com/rUOtObFhiX
— zaheer khan (@ImZaheer) April 24, 2017
இந்நிலையில் ஜாகிர்கானுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளே தனது டுவிட்டர் பக்கத்தில், சகாரிகாவுக்கு டாக் பண்ணுவதற்கு பதிலாக மூத்த பத்திரிகையாளர் சகாரிகா கோஷுக்கு டாக் செய்துவிட்டார்.
இதே போல ஜாகீர்கான் விளையாடும் ஐபிஎல் அணி நிர்வாகமான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கும்ளே போல தவறாக டாக் செய்து வாழ்த்து தெரிவித்துவிட்டது.
இதனால் அதிர்ச்சியான பத்திரிகையாளர் சகாரிகா கோஷ், சார்களா, நான் அந்த சகாரிகா இல்ல. நான் ஒரு குழந்தைக்கு தாய் என பதில் அளித்துள்ளார்.