தோழிகளை கழற்றிவிட்டு வெளிநாடு பறந்த திரிஷா
மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என 3 படங்களை நடித்து முடித்துள்ளார் திரிஷா. மூன்று படத்துக்கும் ரிலீஸுக்கான இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. தொடர்ச்சியான நடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கவும், கோடை வெயிலை சமாளிக்கவும் வெளிநாடுக்கு டூர் புறப்பட திட்டமிட்டார். வழக்கமாக டூர் சென்றால் தனது தோழிகளுடன் சென்று ஜாலியாக பொழுதை கழிப்பார். இம்முறை என்ன ஆனதோ தோழிகளை கழற்றிவிட்டு தாய் உமாவுடன் வெளிநாடு பறந்துவிட்டார்.
இதுபற்றிய தகவலை தனது இணைய தள பக்கத்தில் திரிஷா வெளியிட்டபோதும் டூர் செல்லும் சுற்றுலா இடம்பற்றி குறிப்பிடவில்லை. ஆனாலும் அவர் நியூயார்க் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு பிறகு மியாமி, புளோரிடா போன்ற இடங்களுக்கு சென்று சுமார் 2 வாரம் சுற்றி திரிய உள்ளதாக நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.