எனக்கு அழகில்லையா? இளமையில்லையா? நடிகை புலம்பல்!



அந்த நித்திய நடிகையிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே செகண்ட் ஹீரோயின், தேர்ட் ஹீரோயின் ரோல்தான் என்கிறார்களாம். எனக்கென்ன குறைச்சல்? எங்கிட்டே அழகு இல்லையா? இளமை இல்லையா? நான் ஹீரோயினா நடிக்கக்கூடாதா? என்று தமிழில் தனக்கு நெருக்கமான டான்ஸ் - கம் - டைரக்‌ஷன் ஹீரோவிடம் நடிகை புலம்பியிருக்கிறார்.

அதெல்லாம் இருக்கு. ஆனா கோணிமூட்டை மாதிரி ஷேப்பே இல்லாம இருக்கிற உடம்பை முதல்ல குறைக்கற வழியைப் பாரு. இல்லேன்னா அண்ணி, அம்மா ரோலுக்குக்கூட கூப்பிடுவாங்க என்று அந்த ஹீரோவும் பதிலுக்கு கலாய்த்திருக்கிறார். சமீபத்தில் உடல் எடையைக் குறைத்து ஆச்சரியப்படுத்திய பிரும்மாண்ட நடிகை ஒருவரிடம் டயட், எக்சர்சைஸ் விவரங்களை விசாரித்துவிட்டு வந்தாராம் நித்தியம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url