அது உன்னால் முடியாது கோலியை கிண்டல் செய்த காதலி அனுஷ்கா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் காதலி அனுஷ்கா,தாடியை நீ எடுக்கவும் கூடாது. அது உன்னால் முடியாது என பதிவிட்டிருந்தார்.
இந்திய அணிக்கு மூன்று வித போட்டிகளில் தலைவராக உள்ளார் விராட் கோலி. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பத்தாவது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு தலைவராக உள்ளார்.
இவர் தலைமையிலான பெங்களூரு அணி சற்று தடுமாறிக்கொண்டிருக்கிறது. இன்று ஹைதராபாத் அணியுடன் மோதவிருந்த போட்டி கூட மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த பத்தாவது ஐபிஎல் போட்டியில் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களை புதுவித ஸ்டைல்களில் தயார்படுத்திக் கொண்டு மைதானத்தில் களமிறங்கின்றனர்.
யுவராஜ் ஹெர்ஸ்டைல் ஜடேஜா மற்றும் பாண்ட்யா போன்றோர் தங்களது தாடியை சேவ் செய்து புது வித தோற்றத்துடன் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோலி தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் மன்னித்து விடுங்கள் நண்பர்களே நான் தாடியை எடுக்க தயாராக இல்லை என பதிவிட்டிருந்தார்.
இதற்கு அவரது காதலி அனுஷ்கா, நீ எடுக்கவும் கூடாது. அது உன்னால் முடியாது என பதிவிட்டிருந்தார்.