விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்?
விஜய் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் ஸ்ரீதிவ்யா. அட்லீ இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருந்தார். ஷூட்டிங் தொடங்கும் முன் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து இந்த கேரக்டருக்கு ஸ்ரீதிவ்யாவை நடிக்க அட்லீ கேட்டிருக்கிறார். ஆனால் அவர் நடிக்க மறுத்தாராம்.
இது குறித்து பட தரப்பில் கூறும்போது, ‘விஜய்யுடன் நடிப்பதில் ஸ்ரீதிவ்யா ஆர்வமாகத்தான் இருந்தார். ஆனால் நாங்கள் கேட்ட தேதியை அவர், அதர்வாவுடன் நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த படத்துக்கு கொடுத்திருந்தார். அதனால் நடிக்க முடியாத சூழல் என கூறிவிட்டார்’ என்றனர். இப்போது அந்த வேடத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.