உஷ்ஷ்!
சமீபத்தில் வெளியான ப.பா படத்தில் பிளாஷ்பேக்கில் நடித்திருந்த மடோன நடிகையை, படத்தின் புரமோஷனுக்கு அழைத்தபோது, வர மாட்டேன் என்று மறுத்து விட்டாராம். கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து போக, உயர்வகுப்பில் பிளைட் டிக்கெட்டுகள் மற்றும் சென்னையில் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல், இங்கு வெளியே போய் வருவதற்கு சொகுசு கார் வசதி, உதவியாளர்களுக்கு பேட்டா என, ஏகப்பட்ட தொகையைக் கொடுக்க வேண்டும் என்று, நடிகை கறாராகக் கேட்டு வாங்குகிறாராம். இதனால்தான் அவரைப் புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்ய பலர் தயங்குகிறார்களாம்.