64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்

பாரீஸ் ;


பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளர் இமானுவேல் மேக்ரன். 39 வயதான மேக்ரன் அதிபர் தேர்தலில் வேட்பாளராக உள்ளார். முதல் சுற்றின் முடிவின்படி பிரான்சின் அதிபராவதற்கான வாய்ப்புகள் மேக்ரனுக்கு அதிகமாகவே உள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுவருகின்றன.

இந்நிலையில் இந்த அதிபர் வேட்பாளரின் மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ். இவருக்கு வயது 64. தன்னைவிட 25 வயது மூத்த ஒருவரை மணந்துள்ளார் மேக்ரன். 17 வயதில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தன்னுடைய ஆசிரியையை மணப்பதாக வாக்களித்த மேக்ரன் அதை போலவே தன்னுடைய பள்ளி ஆசிரியையை மணந்துள்ளார்.

மேக்ரனுக்கு திருமணமானபோது பிரிஜ்ஜெட்டுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2007-ல் பிரிஜ்ஜெட்டுக்கு விவாகரத்தான பின்னர் தன்னுடைய 29 வயதில் பிரிஜ்ஜெட்டை மணந்துள்ளார் மேக்ரன்.

மேக்ரன் பிரான்ஸின் அதிபராகப் பதவியேற்றால் பிரான்ஸின் முதல் பெண்மணியாக பிரிஜ்ஜெட் திகழ்வார். உலகிலேயே வித்தியாசமான அதிபர் தம்பதிகளாக இவர்கள் திகழ்வார்கள் என்று கூறப்படுகிறது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url