தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு 280 சரிவு

சென்னை:






தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 280 சரிந்தது.  தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டது. கடந்த 23ம் தேதி ஒரு கிராம் 2,838க்கும் பவுன் 22,704க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலையே நேற்று முன்தினம் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தங்கம் மார்க்கெட் விற்பனை தொடங்கியது.
ஆனால், தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது, ஒரு கிராம் தங்கம் 35 சரிந்து ஒரு கிராம் 2803க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 280 குறைந்து ஒரு சவரன் 22,424க்கு விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 10 டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. இதுவே தங்கம் விலை குறைவுக்கு காரணம். தற்ேபாதைய சூழ்நிலையில் தங்கம் விலை உயர தான் அதிக வாய்ப்புள்ளது. அதாவது வடகொரியா, தென்கொரியாவில் போர் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் அமெரிக்கா, வடகொரியா இடையே பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது. உலக பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டால் தான் அதன் பிறகு தங்கம் விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url