ஐ.பி.எல் டி20 : புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்



புனே: ஐ.பி.எல் டி20 சீசன் 10 இன்றைய லீக் போட்டியில் புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது.

இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா ரைடர்ஸ் அணி, 18.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை  இழந்து  184 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் உத்தப்பா அதிரடியாக ஆடி 47  பந்துகளில் 87 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். கவுதம் காம்பீரும் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 62 ரன்களை குவித்தார்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url