15 ஆண்டுகளில் இந்தியாவில் அனைவருக்கும் வீடு, வாகனம், ஏசி வசதி: நிதி ஆயோக்கின் தொலைநோக்கு திட்டம்


அடுத்த 15 ஆண்டுகளில் (2032) இந்தியர்கள் அனைவருக்கும் வீடு, வாகனம், ஏசி வசதி அளிப்பது தொடர்பான தொலைநோக்கு திட்டத்தை அரசுக்கு ஆலோசனை கூறும் அமைப்பான நிதி ஆயோக் வகுத்துள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் 2031-32-ல் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டம் குறித்த கருத்துருவை நிதி ஆயோக் வெளியிட்டது. இந்த இலக்கை எட்டுவதற்கு எத்தகைய உத்திகள், செயல் திட்டங்கள் வகுக்க வேண்டும் என்றும், முழு வதும் படிப்பறிவு மிகுந்த சமுதாயம் மற்றும் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இதில் விளக்கப்பட்டது.

அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் சாலை வசதி, ரயில் போக்குவரத்து, நீர் வழி இணைப்பு மற்றும் விமான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்து வது மற்றும் பசுமையான இந்தி யாவை உருவாக்குவது உள்ளிட்ட திட்டமும் அதில் இடம்பெற்றி ருந்தது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான குடிநீர் வசதியை உறுதிப்படுத்துவதற்கான செயல் திட்டமும் அதில் இடம்பெற்றிருந்தது.

தனிநபர் ஆண்டு வருமானம் தற்போது ரூ.1.06 லட்சமாக உள்ளது. இதை மூன்று மடங்காக அதாவது 2032-ல் தனிநபர் வருமானம் ரூ. 3.14 லட்சமாக உயரும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் திறன் தற்போது ரூ.137 லட்சம் கோடியாக உள்ளது. இது 2032-ல் ரூ.469 லட்சம் கோடியாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் செலவுத் தொகை இப்போது ரூ.38 லட்சம் கோடியாக உள்ளது. இது 2031-32-ம் ஆண்டில் ரூ.130 லட்சம் கோடியாக உயரும் எனவும் கணித்துள்ளது.

15 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், 7 ஆண்டு களுக்கான உத்தி சார் அடிப் படையிலான திட்டங்களையும் அது தயாரித்துள்ளது. 2017-18-ம் நிதி ஆண்டிலிருந்து 2031-32 வரை செயல்படுத்த வேண்டியவை எவை எனவும் அது பட்டியலிட்டுள்ளது.

முதல் கட்டமாக மூன்று ஆண்டு களுக்கான செயல்திட்டங்கள் 2017, 2018, 2019 வரை செயல்படுத்த வேண்டியவை குறித்த விவரத்தை நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பார்வைக்கு நிதி ஆயோக் சுற்றுக்கு விட்டுள்ளது. இந்த செயல்திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் முக் கியமான தொலைநோக்கு திட்ட மான ``வைப்ரன்ட் இந்தியா 2032’’ என்ற இலக்கை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையாக இருந்தது.

இந்தியாவை வளம்மிக்க, ஆரோக்கியமான, பாதுகாப்பான, லஞ்ச, ஊழல் இல்லாத, எரிசக்தி அதிகம் கிடைக்கும் நாடாக, சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறைந்ததாக, சர்வதேச அளவில் வலிமை மிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்று ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url