பிறந்து 11 மாதமே ஆன சொந்த மகளை கொலை செய்து பேஸ்புக் லைவில் ஒளிபரப்பிய கொடூர தந்தை!

பிறந்து 11 மாதமே ஆன சொந்த மகளை கொலை செய்து தந்தை ஒருவன் பேஸ்புக் லைவில் ஒளிபரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



சமூக வலைதளமான பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒளிபரப்பு செய்யும் வசதி வந்ததில் இருந்து பல்வேறு அதிர்ச்சி வன்முறை சம்பவங்கள் அதன்வாயிலாக வெளியிடப்பட்டு வருகிறது. கொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்கள் லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது, இவ்விவகாரத்தில் பேஸ்புக் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுவிடனில் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ லைவாக வெளியிடப்பட்டது, இது தொடர்பாக விசாரணை செய்த அந்நாட்டு நீதிமன்றம் நேற்று குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோவானது வெளியாகி உள்ளது தாய்லாந்து நாட்டில் இருந்து. தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளம் தந்தை தன்னுடைய 11 வயது மகளை தூக்கிட்டு கொலை செய்து உள்ளான், அதனை வீடியோவாக பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளான். தாய்லாந்து நாட்டை சேர்ந்த 21 வயது இளைஞர் வுட்டிசன் வோங்டாலே இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளான். வுட்டிசன் வோங்டாலேவிற்கும், திரிராத்னா என்ற பெண்ணிற்கும் திருமணம் ஆகிய பெண் குழந்தை பிறந்து உள்ளது.

குழந்தை பிறந்த பின்னர் திரிராத்னாவின் முன்னாள் கணவனுக்கு பிறந்த குழந்தையை வுட்டிசன் தொடர்ந்து தாக்கி உள்ளார், இதனால் கோபம் அடைந்த திரிராத்னா வீட்டைவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவிய பிரிந்து வுட்டிசன் வாழ்ந்து வந்து உள்ளார். மகளை வளர்ப்பதாக கூறி தன்னுடன் வைத்து உள்ளார். திரிராத்னா திரும்ப வராத காணத்தினால் அமைதியை இழந்து உள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதிலிருந்து வுட்டிசன் கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் உள்ள தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத்தளமான புக்கெட் தீவிற்கு தனது மகளுடன் சென்ற வுட்டிசன் சென்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று 11 மாத பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல், தனது மகளை தூக்கிட்டு கொன்று உள்ளான். இதுமட்டுமல்லாமல் இந்த கொடூர செயலை இரு வீடியோவாக பேஸ்புக் லைவ் மூலமாக ஒளிபரப்பு செய்து உள்ளான். இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த வுட்டிசனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

சுமார் 24 மணி நேரங்கள் வீடியோவானது பேஸ்புக்கில் ஒளிபரப்பு ஆகி கொண்டே இருந்து உள்ளது. போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்த போது வுட்டிசனும் தற்கொலை செய்துக் கொண்டான் என்பது தெரியவந்து உள்ளது.  

வுட்டிசன் ஒளிபரப்பு செய்த கொலை காட்சிகளை, 24 மணி நேரத்திற்கு பிறகு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்த பின்னரே பேஸ்புக் பகுதியில் இருந்து நீக்கப்பட்டது. அதற்குள் இந்த வீடியோ காட்சிகளை சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். கொடூரமான சம்பவம் தொடர்பாக தகவல்கள் பரவியும் நடவடிக்கை எடுக்காத பேஸ்புக் நிறுவனத்திற்கு பலரது தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad