வடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை



சியோல்,

அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தாங்கள் வைத்திருக்கும் ஜூஷி ஆயுதங்களால் அமெரிக்க படைகளை எங்கள் படைகளால் அழிக்க முடியும். இதில் ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக உலக நாடுகள் அனைத்தும் தங்களை பாதுகாப்பு படுத்தி கொள்வதற்கு தயார் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐப்பான் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அதாவது அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு வலைத்தளத்தில், வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், ஜப்பான் மக்கள் அனைவரும் வலுவான கான்கிரீட் இடத்தை கண்டு பிடித்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் ஜன்னலுக்கு அருகில் யாரும் நிற்கவேண்டாம் எனவும் அதை விட்டு விலகியே இருக்கும் படியும் கூறியுள்ளது.

இதற்கு காரணம் கடந்த பிப்ரவரி மாதம் வடகொரிய ஏவுகணை சோதனை மேற்கொண்டதாகவும், அது சுமார் 1,600 கி.மீட்டர் கடந்து வந்து ஜப்பானின் Okinawa என்ற பகுதியில் வந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இது பறந்து வருவதற்கு எடுத்துக் கொண்ட நேரம் பத்து நிமிடம் ஆகும். அதன் காரணமாகவே இந்த அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் மட்டும் வடகொரியா நான்கு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டதாகவும், அதில் மூன்று ஜப்பானின் கடல்பகுதியில் வந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் கடந்த 23-ஆம் தேதி தான் அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை அதை 5.7 மில்லியன் மக்கள் படித்துள்ளனர். இதனால் ஜப்பான் மக்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.மேலும் ஜப்பான் அரசாங்கம் அவ்வாறு ஒரு தாக்குதல் நடந்தால், எப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், பொதுமக்களை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url