கோஹ்லி யாரை களமிறக்குவார்
இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்க ஷிகார் தாவான், லொகேஷ் ராகுல் ஆகிய இருவரில் யாருக்கு இடம் கொடுப்பது என்ற கேள்வி அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு எழுந்துள்ளது. இந்திய அணி மேற்கிந்திய தீவில் சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இதற்கான முதல் போட்டி வருகிற 21 ம் தேதி ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மூன்று பேர் உள்ளனர். முரளி விஜய் இடம் உறுதியாகியுள்ளது,அவருக்கு ஜோடியாக யாரை விளையாட வைப்பது என்பது தற்போது இந்திய அணியில் பெரும் குழப்பமாக உள்ளது. மேலும் இடது கை ஆட்டக்காரரான ஷிகர் தவான் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை.தற்போது மேற்கிந்திய தீவில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளிலும் (50.9) ஓட்டங்கள் தான் எடுத்தார். நடந்து முடிந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் லோகஷ் ராகுலா 2 அரைசதங்கள் அடித்தார். மேலும் ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். இதன் காரணமாக லோகஷ் ராகுலா அல்லது ஷிகார் தாவான் என்ற குழப்பம் நிலவுகிறது. மேலும் இந்திய தேர்வாளர்கள் அனைவரும் ஷிகார் தவானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.