மலேசிய வில்லனை அழிக்க உதவும் கிராமிய விளையாட்டு
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் கில்லி பம்பரம் கோலி ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் சார்பில் டி.மனோகரன் தயாரித்து இயக்குகிறார். படத்தில் ஹீரோ, ஹீரரோயின் என்று தனியாக யாரும் கிடையாது. தமிழ், பிரசாத், நரேஷ், சந்தோஷ்குமார், தீப்தி ஷெட்டி என்ற புதுமுகங்களுடன் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார்கள். ஒய்.ஆர்.பிரசாத் இசை அமைக்கிறார், நாககிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். வெளிநாட்டில் வேலை செய்யும் 3 இளைஞர்களும் ஒரு பொண்ணும் வெவ்வேறு சூழ்நிலைகளில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். அவர்கள் நல்ல நட்புடன் பழகி வரும்போது அந்த ஊரில் உள்ள ஒரு வில்லனிடம் ஏற்படும் பிரச்னையினால் அவர்கள் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஊரை விட்டு வெளியேறாமல் இருந்து அந்த வில்லனை அழிக்க கத்தியின்றி, ரத்தமின்றி அவர்கள் எடுக்கும் ஆயுதம் தான் கில்லி, பம்பரம் , கோலி. இந்த படத்தில் காதல், டூயட் பாடல் எதுவும் இல்லாத நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. என்கிறார் இயக்குனர் மனோகரன்