ஷேன் வார்ன் செய்ய முடியாததை செய்து காட்டிய யாசிர் ஷா
இங்கிலாந்து அணியின் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிரான பாரம்பரிய பலவீனத்தை யாசிர் ஷா நேற்று பயன்படுத்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தை 253/7 என்று சரிவடையச் செய்தார். யாசிர் ஷா 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்து பேட்ஸ்மென்களை தன் வாழ்நாள் முழுதும் ஆட்டிப்படைத்த ஷேன் வார்ன் கூட லார்ட்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஷேன் வார்ன் 4 முறை இங்கு விளையாடியுள்ளார். ஆனால் முஷ்டாக் அகமது 5 விக்கெட்டுகளை லார்ட்ஸில் எடுத்துள்ளார். மேலும் ஆசியாவுக்கு வெளியே முதன் முதலாக யாசிர் ஷா இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ரூட், வின்ஸ், பேலன்ஸ், பேர்ஸ்டோ, மொயின் அலி ஆகியோர் அடங்கிய இங்கிலாந்து மிடில் ஆர்டரை உடைத்தார் யாசிர் ஷா. தொடருக்கு முன்பே கூட இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் இங்கிலாந்தின் வலுவற்ற மிடில் ஆர்டர் குறித்து பேசி இங்கிலாந்தை உசுப்பேற்றினார்