ரஷ்யாவை கலக்கும் ஆலுமா டோலுமா
அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடலை யுடியூப் இணையதளத்தில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்து, அவரே பாடியிருந்தார். அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த பாடலுக்கு தற்போது ரஷ்யாவிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் உணவகம் ஒன்றின் முன், நடனக்குழுவினர் ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர்.இந்த பாடலுக்கு ஆடிய பெண்களின் நளினமான நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், இந்த பாடலையும் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். ரஷ்யாவில் தனது பாடலுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இசையமைப்பாளர் அனிருத்துக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.