கடும் கோபமடைந்த கும்பளே
மேற்கிந்திய தீவுகள் – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது, இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா பிடித்த பந்தை அவுட் இல்லை என மூன்றாவது நடுவர் நிரகாரித்ததை அடுத்து இந்திய தலைமை பயிற்சியாளர் கும்ளே கடும் கோபமடைந்தார். நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசிய பந்தை மேற்கிந்திய தீவு அணி வீரர் ராஜேந்திர சந்திரிகா சந்தித்தார். இதன்போது மட்டையின் முனையில் பட்டு பந்தை விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா பிடித்தார். இதுகுறித்து கலந்து ஆலோசித்த கள நடுவர்கள், மூன்றாவது நடுவரின் ஆலோசனையை நாடினர். மூன்றாவது நடுவரின் முடிவை கும்பளே பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், குறித்த காட்சியை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார். நடுவரின் தவறான முடிவால் இந்திய பயிற்சியாளர் கும்பளே கடும் கோபமடைந்தார். ஆட்டத்தின் இடைவெளியின் போது, இதுகுறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியிடம் கும்பளே ஆலோசனை நடத்தினர். பின்னர் விராட் கோஹ்லி அதை கள நடுவரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றார். எனினும், நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்று அசத்தியது.