பேட்ஸ்மேன்களுக்கு பொறுமை அவசியம் ரஹானே கூறுகிறார்
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக நிலைத்து நின்று ஆடுவது அவசியம் என இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வியாழக்கிழமை ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. இந்த நிலையில் ரஹானே மேலும் கூறியிருப்பதாவது: மெதுவான ஆடுகளங்களில் எப்படி பேட் செய்வது என்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். மெதுவான ஆடுகளங்களில் ரன் குவிப்பது எளிதல்ல. எனவே பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் பொறுமையாக களத்தில் நிற்க வேண்டும். பின்னர் முழு கவனம் செலுத்தி விளையாடும்பட்சத்தில் மிகச்சிறப்பாக பேட் செய்ய முடியும் என்றார்.