அஸ்வினுக்கு கைகொடுத்த "ரிதம்"
மேற்கிந்திய வீரர்களுக்கு எதிராக நடைபெற்ற ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, கோஹ்லி மற்றும் அஸ்வினின் ஆட்டம் சிறப்பாக இருந்ததால், அவர்களை சகவீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்திய அணிக்கு கும்பளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், அவரது தலைமையில் இந்திய அணி முதல் வெற்றிக்கனியை ருசித்துள்ளது. இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கூறியதாவது, எனக்கு முதல் இன்னிங்ஸில் ரிதம் சரியாக இல்லை. இதனால்தான் நீண்ட நேரம் நான் பந்து வீச முடியவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் எனக்கு சாதகமாக அமைந்தது. ரிதம் மட்டும் சரியாக வந்து விட்டால் போதும். அசத்தி விடலாம். அதுதான் 2வது இன்னிங்ஸில் நடந்தது. அதுமட்டுமின்றி நமது அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டனர். அதுதான் நமக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்