கமல் ரசிகர்களுக்கு நற்செய்தி
கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்துக்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்படத்துக்கு அநியாயத்துக்கு பப்ளிசிட்டி கிடைத்தது. அந்த பப்ளிசிட்டி காரணமாகவே விஸ்வரூபம் படத்துக்கு வெற்றி கிடைத்தது. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடிக்க ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் விஸ்வரூபம் 2 படம் தயாரானது. பாதி படம் வளர்ந்த நிலையில் விஸ்வரூபம்-2 படம் முடங்கிப்போனது. விஸ்வரூபம்-2 படம் எப்போது ரிலீசாகும் என்று ஏங்கி தவித்த கமல் ரசிகர்களும் ஒருகட்டத்தில் அதை மறந்துவிட்டனர்.இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி தற்போது சபாஷ் நாயுடு படத்தை இயக்கி, நடித்து வரும் கமல்ஹாசன் விஸ்வரூபம்-2 படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து, அதற்கான வேலைகளை வேகப்படுத்தியுள்ளாராம். அதாவது தீபாவலிக்கோ அல்லது அதற்கு முன்னரோ விஸ்வரூபம்-2 படத்தை ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் பொருளாதார ரீதியில் நலிவடைந்துவிட்டதால் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு விஸ்வரூபம்-2 படத்தை தானே வெளியிட இருக்கிறாராம் கமல்! கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள முடிஞ்சா இவன புடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கமல்ஹாசனை அழைக்க சென்ற கே.எஸ்.ரவிகுமாரிடம் விஸ்வரூபம்-2 படத்தின் டிரெய்லரை போட்டுக்காட்டிய கமல்ஹாசன் விஸ்வரூபம்-2 படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருப்பதாக கூறியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு விரைவில் விமோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்