புதிய அவதாரத்திற்கு அடித்தளமிட்ட தோனி
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திகழ்ந்து வரும் தோனி , பயிற்சியாளராக மாறுவதற்கு அடித்தளமிட்டுள்ளார். 35 வயதான தோனி கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றார் என்பது நினைவுக்கூரதக்கது. இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கிரேட் மெக்டர்மார்ட் தொடங்கியிருக்கும் சர்வதேச கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர் மற்றும் விளம்பரத் தூதுவராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் கிரேக் மெக்டர்மார்ட் தொடங்கியுள்ள கிரேக் மெக்டர்மாட் கிரிக்கெட் அகாடமி சார்பில், ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் 4 வருட பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தோனியை கவர, அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளார். இந்தியாவிலும் இது போன்ற ஒரு அகாடமியை தோனி அறக்கட்டளை மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தோனி கூறியதாவது, 'எனக்கு எல்லாம் அளித்த கிரிக்கெட் விளையாட்டுக்கு, இந்த அகாடமி மூலம் என்னால் திரும்ப ஏதாவது செய்ய முடியுமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். தற்போது ஓய்வு வயதை நெருங்கியிருக்கும் தோனி, வருங்காலத்தில் பயிற்சியாளராக மாறுவதற்கு இந்த அகாடமி வித்திட்டுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.