ஸ்லிம்மாகும் முயற்சியில் ரம்யா நம்பீசன்
பீட்சா, சேதுபதி படங்களில் விஜயசேதுபதியுடன் நடித்தார் ரம்யா நம்பீசன். அப்படி நடித்த இரண்டு படங்களுமே ஹிட்டானது. அதிலும் சேதுபதி படத்தில் அவரது மனைவியாக நடித்து ஏகப்பட்ட ரொமான்ஸ் செய்திருந்தார் ரம்யா. மற்றபடி டமால் டுமீல், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் போன்ற படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. அதேசமயம் தனது தாய்மொழியான மலையாளத்தில் தொடர்ச்சியாக நடித்து வரும் ரம்யா நம்பீசன் தற்போது, புலிமுருகன், ஆளத்தூரிலே எதிரி வேட்டம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்இதற்கிடையே தொடர்ந்து தமிழில் நடிக்க, விஜயசேதுபதி போன்ற தனது அபிமான ஹீரோக்களிடம் அவ்வப்போது தொலைபேசி மூலம் நட்பை வளர்த்து வரும் ரம்யா நம்பீசன், அப்போது அவர்கள் மூலம் சில டைரக்டர்களின் நட்பு கிடைக்க, அவர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் ரம்யா படவேட்டை நடத்திய ஒரு டைரக்டர், ரொம்ப வெயிட் போட்டு விட்டீர்கள். குறைந்தபட்சம் 10 கிலோவாவது கம்மி பண்ண வேண்டும். அப்போதுதான், உங்களை கதாநாயகி கோணத்தில் யோசிக்கவே முடியும் என்று கூறி விட்டாராம். அதனால், தற்போது டயட்ஸ் கடைபிடித்து வரும் ரம்யா நம்பீசன், தனது விருப்ப உணவுகளையெல்லாம் ஓரங்கட்டி விட்டு, ஸ்லிம்மாகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்