ஒருவாரத்துக்கு முன்னதாகவே ரசிகர்களை மகிழ்விக்க வரும் திருநாள்
‘ஈ’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா-நயன்தாரா ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் என்பவர் இயக்கியிருக்கிறார். கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. எப்போதோ வெளியாகவேண்டிய இப்படத்தை வரும் ஆகஸ்ட் 12-ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், அன்றைய தேதியில் விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’, தனுஷின் ‘தொடரி’, விக்ரம் பிரபுவின் ஆகிய ‘வாகா’ ஆகிய படங்கள் வெளியாவதால் பலத்த போட்டி நிலவியது. எனவே, இந்த போட்டியில் இருந்து யார் பின்வாங்குவார்கள்? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முதன்முதலாக ‘திருநாள்’ பின்வாங்கியுள்ளது. ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாகும் என கூறப்பட்ட ‘திருநாள்’, தற்போது ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, ஆகஸ்ட் 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் மீனாட்சி, கருணாஸ், ‘நீயா நானா’ கோபிநாத், சரத் லோகிதாஸ்வா, ஜோ மல்லூரி உள்ளிட்டோரும் நடித்தள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கோதண்டபானி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.