கமல் நாயகியை வளைத்துப்போட்ட விவேக்
காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறி வருகின்றனர். அந்த வரிசையில் விவேக், ஹீரோவாக நடித்த பல படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியைத் தேடித்தரவில்லை. இருப்பினும், அவரைத் தேடி ஹீரோ வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது ‘துப்பறியும் சங்கர்’ என்ற படத்தில் விவேக் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் விவேக் துப்பறிவாளராக நடிக்கிறாராம். 1960-களில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விவேக் ஜோடியாக கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’, ‘இறைவி’ ஆகிய படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் சென்னையில் தொடங்கவிருக்கிறது. மேலும், இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது