ரஜினிகாந்துடன் போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்: இர்பான்கான்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ வெளியாகும் அதே நாளில் (22-ந் தேதி), இந்தி நடிகர் இர்பான்கான் நடித்த ‘மதாரி’ என்ற இந்திப்படமும் வெளியாகிறது. குழந்தைகளுக்காக, ‘மதாரி’ படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இர்பான்கானிடம், ‘கபாலி’யுடன் அவரது படம் மோதுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு இர்பான்கான் கூறியதாவது:- இது மோதல் அல்ல. ரஜினிகாந்த், ஒரு பெரிய மனிதர். உலகம் முழுவதும் தெரிந்த பெரிய நடிகர். அவருக்கு நான் சமம் அல்ல. அவர் படத்துடன் என் படம் வெளியாவதே எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல் கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம். ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன் போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.