போலி தாடியுடன் பேஸ்புக்கில் உலா வரும் தோனி
இந்திய கிரிகெட் அணித்தலைவர் தோனி தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறார் என்பதை ரசிர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக முகநூலில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். கோஹ்லி தலைமையில் மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது, டெஸ்ட் போட்டி என்பதால் அணித்தலைவர் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டி, உள்ளூர் போட்டிகள் மற்றும் தனது அணியினருக்கு பயிற்சி என்று பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த தோனி, இப்போது தனது குடும்பத்தை சரணடைந்துவிட்டார். தனது செல்லமகளுடன் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம், மழையில் பைக் ஓட்டியது என புகைப்படங்களை பதிவேற்றம் செய்த இவர், தற்போது போலியான தாடியுடன் தனது மகளை மடியில் அமர வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது கிடையாது, நான் எனது மகளை சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டது, அவளுக்கு எனது முகம் கூட மறந்துபோயிருக்கும் என கடந்த மாதம் தோனி கிண்டல் செய்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.