அயல்நாட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன்
மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்துச் சாதனை புரிந்தார். அயல்நாட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி. நேற்று 16 பவுண்டரிகள் அடித்திருந்த கோலி இன்று மேலும் 8 பவுண்டரிகளுடன் 281 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்து சாதானை புரிந்தார். அனில் கும்ப்ளே கைதட்டினார், மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் கரகோஷம் செய்தார். கோலியின் சாதனைகள் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.